• s-2

    சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.

  • Ministry of Petroleum Resources Development
அண்மைய செய்திகள்

 DSC0023பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

2016-2017ஆண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் (17) பிள்ளைகளுக்கும் புலமை பரிசில் வழங்கும் நிகழ்வியே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இன்று மத்தியம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்

' வேலைவாப்புக்கள் வழங்குவது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் கடமைபுரியும் பெற்றோர்களின் சேவைக்காலத்தை கருத்தில்கொள்ளப்படும். இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இதுதெடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சட்டப்பிரிவு புதிய சட்டவரைபொன்றை தயாரித்து, எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.”

'பல்கலைகழக தெரிவானது ஒருபக்கம் திறமையையும் மறுபக்கம் அதிஷ்டத்தையும் கொண்டது. ஆனால் தற்போது பல்கலைகழகத்தில் 8,9 ஆண்டுகள் இருந்து சில மாணவர்கள் காலத்தை வீனாக்கின்றனர். மேலும் நினைத்துப்பாருங்கள் தனது உரிமையை பெற்றுக்கொள்ளள பல்வேறு வழிகள் உண்டு. அதுதாதன் சிறந்த வழி. ஆகவே பல்கலைகழகத்தில் தன்னை கட்டுப்படுத்தும் பொறுப்பை வேறுநபர்களுக்கு கொடுக்கவேண்டாம். அப்படி செய்தால் வெளியே வரவேண்டிய நிலை ஏற்படும். எமக்கு அவசியம் கற்ற மாணவர்கள். எமது கூட்டுத்தாபனத்தில் உயர்கல்வி கற்றவர்களுக்கு வேலைவாயப்பு பெறும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அதனால் இந்த சந்தர்ப்பத்தை எமது கூட்டுத்தாபனத்தில் வேiலைசெய்வோரின் பிள்ளைகளுக்கும் வழங்க முடியும்.
நீங்கள் முடிவு எடுக்கும் போது பெற்றோர்களை நினைத்துப்பாருங்கள். பெற்றோர்களை கேட்டு முடிவுகளை எடுங்கள்.” என்று தெரிவித்தார் அமைச்சர்.

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்