logo

inner slider

dept min new

பெற்றோலிய வளத்துறையானது நம் தேசத்தின் மற்றுமொறு பிரதான சக்தி வளமாகும். இது அன்றாட வாழ்வில் அத்தியாவசிய காரணியாக மாறியுள்ளது. பெற்றோலிய வளத்துறை அமைச்சின் மிக முக்கிய குறிக்கோள் நுகர்வோருக்கு தடையில்லாது எரிபொருள் வழங்குதலை உறுதிசெய்வதாகும். இக்குறிக்கோளை அடைவதற்கு இலங்கை பெற்றோலியத்துறையில் பல கொள்கைகள், நிகழ்ச்சிகள் மற்றம் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கீழ்நிலை மற்றும் மேல் நிலை பெற்றோலிய வள தொழிற்துறையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை நிலைபேறானதாகவும் , விரிவனதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகயை மேற்கொள்வேனென, பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் என்ற வகையில் நான் உறுதியளிக்கின்றேன்.

இலங்கையின் சக்தி வளத் துறையினை மேம்படுத்தும் பொருட்டு பிராந்திய மற்றும் உள்ளக ரீதியில் பெற்றோலிய களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு, பெற்றோலிய பொருட்களுக்கான பரிமாற்றக் குழாய்கள் மற்றும் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விஸ்தரிப்பு, புத்ததாக்கம் தொடர்பான உட்கட்டுமான வசதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதை உறுதிசெய்கின்றேன்.

மேலும் பெற்றோலிய கூட்டுத்தாபனமானது நிதிச்செயற்பாடுகளுக்கான பொது முயற்சியாளர் என்ற வகையில் இந்நிறுவனத்திற்குள் அனைத்து திரட்டு நட்டங்களையும் ஈடுசெய்யும் நோக்கில் புதிய மற்றும் வேறு வகைளிலான இலாபமீட்டும் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு இந்நிலைமையினை மாற்றியமைப்பதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும்.

எனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி பெற்றோலிய வளத்துறை மற்றும் அது சார்ந்த தொழிற்துறையை மிக உன்னதமான, தன்னிறைவான இடத்திற்கு கொண்டுசெல்ல பல வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். இதனை இட்டுச்செல்வதற்கு உதவிபுரிந்த பெற்றோலிய வளத்துறை அமைச்சின் பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், இதர அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு எனது மனமாந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கௌரவ அமைசச்சர்

அர்ஜூன ரணதுங்க பா.உ
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 118.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 129.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்