• About Slider

இலங்கை பெற்றோலிய கைத்தொலிலானது காலத்திற்குகாலம் தொடர்ந்து வந்த அரசாங்க்களினால் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை தீர்மானங்களின் காரணமாக தொடராக பல கட்டமைப்பு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றது.அநேகமான பெற்றோலிய பொருட்களின் இறக்குமதி, வினியோகம் மற்றும் விற்பனை என்பன 1960 முதல் 1990 வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினாலேயே கையாளப்பட்டது. 1990 இன் நடுப்பகுதியிலிருந்துதனியுடமை சந்தை முறைமையானது தாளரளமயமாகக்ள் கொள்கை காரணமாக மாற்றப்பட்டதோடு அது பல உற்பத்தி வகுதிகிளனுள் நுழைவதற்கு தனியார் துறைக்கு வாய்ப்புகளை வழங்கியது.

ministryஎவ்வாறாயினும் நாட்டில் பெற்றோலிய கைத்தொழிலின் விரிவுபடுத்தப்பட்ட கீழ்நீரோட்ட செற்பாடுகளுக்கான கொள்கை தீர்மானங்கள் மற்றும் பணிப்புரைகளை ஏற்பாடுசெய்வதற்கு அமைச்சரவை மட்ட அமைச்சின் தேவையினை அங்கீகரித்து 2010 ஏப்பிரல் 30 ஆந் திகதிய 1651/20 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெற்றறோலிய கைத்தொழில்கள் அமைச்சு தாபிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சானது பல்வேறு பொருளாதார துறைகளில் வேறுபட்ட நோக்கங்களுக்காக தொடரான எரிபொருள் வழங்கலை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இந்த அமைச்சு அதன் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக பெற்றோலிய கைத்தொழில் மூன்றாம்நிலை செயற்பாடுகளின் முகாமைத்துவத்தில் பிரதான கொள்கைத் தீர்மானங்களை எடுத்திருக்கின்றது. இந்த கொள்கைத் தீர்மானங்கள் அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற இரண்டு முகவராண்மைகளான, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றோலியக் களஞ்சிய டர்மினல்ஸ் என்பவற்றுடனும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்காளர்களுடனும் இணைந்து அமுல்படுத்தப்படுகின்றது.

 

நோக்கு

மேல்நிலை மற்றும் கீழ்நிலைப் பெற்றோலியத் துறைகள் இரண்டையும் இலங்கையின் தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் முன்னணித் துறைகளாக உருவாக்குதல்

எமது பணி

மேல்நிலை மற்றும் கீழ் பெற்றோலியக் கைத்தொழில்களின் செயற்பாடுகளை, நாட்டின் சக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய வகையிலும் நாட்டின் பெற்றோலிய வளங்களுக்கு உகந்த முறையிலும் வினைத்திறன்மிக்கதும் பயனுறுதி வாய்ந்ததுமான நிலைபேறான ஒரு முறையில் முகாமைசெய்தல்

குறிக்கோள்கள்

  • 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையை சக்தித் துறையில் தன்னிறைவடைந்த நாடாக மாற்றுதல்.
  • 2030 ஆம் ஆண்டாகும் போது உள்நாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தியை உச்சப்படுத்துதல்.
  • 2030 ஆம் ஆண்டாகும் போது சுயமான செயன்முறையின் ஊடாக நாட்டின் பெற்றோலிய உற்பத்திகளுக்கான கேள்வியைப் பூர்த்திசெய்தல்.
  • டீசல் மற்றும் பெற்றோலின் தரத்தை முறையே EURO III மற்றும் EURO IV நியமத் தரங்களுக்குத் தரமுயர்த்துதல்.
  • எரிபொருளைப் மிகவும் வினைத்திறன்மிக்க முறையிலும் பாதுகாப்பான முறையிலும் களஞ்சியப்படுத்தி விநியோகத்தல்
  • பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை பெற்றோலிய எரிபொருளாக மாற்றுவதன் ஊடாக பிளாஸ்டிக்கினால் சுற்றாடலுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்தல்.
  • எரிபொருள் விநியோகத்தின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துதல்
  • எரிபொருள் பாதுகாப்பை ஊக்குவித்தல்

அமைச்சின் கீழ் நிறுவனங்கள்

 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)

cpcஇலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டம் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் திருத்தங்களினால் அரச தொழில் முயற்சியொன்றாக தாபிக்கப்பட்டது.

 

இலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையம் மட்டுமே (CPSTL)

cpstlCPSTL பெட்ரோலிய பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகம் பொறுப்பு.

 

 

பெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்

ஒரு , பாரபட்சமில்லாத பாதுகாப்பான மற்றும் சூழல் முறையில் தொழில் மேலாண்மை மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் நாட்டின் பெட்ரோலிய வளங்களை நன்மை என்று உறுதி